மீத்தேன் வாயு திட்டத்தை ஏன் ஏற்கக்கூடாது ?

வேளாண்மைக் களஞ்சியத்தை அழித்து கரிக்களஞ்சியம் கட்டுவது பொன்முட்டையை நிதமும் இடும் வாத்தை அறுத்து உடனடியாக நிறைய பொன்முட்டைகள் வேண்டும் என்பதற்குச் சமம் என்று கூறலாம். 

அடர்ந்த, முதன்மையான வேளாண் நிலங்களை வலிந்து கரிக்களஞ்சியமாக ஆக்குவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பலனளிக்கும். ஆனால் வேளாண் களஞ்சியமோ என்றைக்கும் பலனளித்து வந்திருக்கிறது; வரக்கூடியது.

கரிக்களஞ்சியம், தமிழ்நாட்டிற்குச் சிறிதும், பிற நாடுகள் மாநிலங்களுக்குப் பெரிதுமாகப் பலனளிக்கும். ஆனால், வேளாண் நெற்களஞ்சியமோ பெரிதாக தமிழ்நாட்டிற்கும் சிறிதாக பிற நிலங்களுக்கும் பலன் தரும். அதன் தன்மை அப்படியானது. ஆக, நெற்களஞ்சியமே 10 கோடி மக்களுக்கு அதிகம் பலன் தருவது. அந்தப் பொருளியலை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளாவிட்டால் தன் கண்ணில் தானே அமிலம் இட்டுக் கொள்வதாகவே பொருள்.

தமிழ்நாட்டிற்குப் பிற மாநிலங்கள் தரவேண்டிய நீரளவும், நீர் உரிமையும் ஆழ்ந்த வணிக அரசியலால் தடுக்கப் பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சுற்றி உள்ள மாநிலங்களும் நாடுகளும் தமிழர்களுக்கு எதிரிகளாக உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டின் தொன்மையான செல்வங்கள் மருத வளமும், நெய்தல் வளமும் ஆகும். தமிழ்நாட்டு மருத வளம், நீர்ப்பங்கீட்டு ஓரவஞ்சனையால் வறட்சிக்குட்படுத்தப்படுகிறது. நெய்தல் வளம் சிங்களரால் சுட்டுக் கொல்லப்பட்டுச் சீரழிக்கப் படுகிறது. தமிழக் கடற்கரையைச் சுற்றிய கடற்பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களும் பன்னாட்டு வணிக அரசியலுக்குள் வந்து விட்டன.

ஆகவே, இந்த இரண்டு வளங்களையும் விட்டு விட்டால் பாலாவின் பரதேசிகளாய், அடிமைகளாய்த் தமிழ்க் குலம் மேலும் மாறிப்போகும். இதனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

தற்போதைய மீத்தேன் முனைப்புகளை, மன்னார்குடியில் இருந்து வடக்காகக் கோடு கிழித்து நெய்வேலியைத் தொட்டுப் பார்த்தால் இங்கே வெட்டப் படும் கிணறுகள் இறைத்து வெளியிடும் நீர் கிழக்காகத்தானே ஓடும்? மேற்குக்கு கிழக்குதான் நம்மூரில் பள்ளம்! ஆக, தற்போது குறைவாக (80) வெட்டப்படும் கிணறுகள் வெளியேற்றும் மாசு நீர் கடற்கரை வரை எல்லாப் பயிர்களையும். எல்லா நிலங்களையும், எல்லா ஊர்களையும் ஏப்பமிட்டு விடும் என்பது உண்மைதானே? அது என்ன சிறிய நிலப் பரப்பா? நாக நாடு முழுதும் காலியாகிவிடுமல்லவா? விழித்திருந்து ஏமாறலாமா? நம் விரலைக் கொண்டு நம் கண்ணைக் குத்திக் கொள்ளலாமா?.

கரிக்களஞ்சியத்தை மறுத்து நெற்களஞ்சியத்தைக் காப்போம்!

2 comments:

  1. பூவுல‌கு மாத‌ இத‌ழில் க‌ட‌ந்த‌ சூன் ப‌திவில் மீத்தேன் அக‌ழ்வினால் ஏற்ப‌டும் பிர‌ச்ச‌னைக‌ள் குறித்தும், பொருளாதார‌ அடிப்ப‌டையில் கூட‌ இது எவ்வ‌ள‌வு முட்டாள்த‌ன‌மான‌ திட்ட‌ம் என்ப‌தை விள‌க்கும் வ‌ந்த‌ க‌ட்டுரையையும் இங்கு ப‌திய‌ வேண்டுகோள் வைக்கின்றேன்.

    இக்க‌ட்டுரையை சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம் ஆங்கில‌த்தில் மொழியாக்க‌ம் செய்து வ‌ருகின்ற‌து. உங்க‌ள‌து மின்ன‌ஞ்ச‌ல் கொடுத்து உத‌வினால், மொழியாக்க‌ம் முடிந்த‌ உட‌ன் உங்க‌ளுக்கு அனுப்புகின்றேன்.

    ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌
    சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம்

    ReplyDelete
  2. பூவுல‌கு மாத‌ இத‌ழில் க‌ட‌ந்த‌ சூன் ப‌திவில் மீத்தேன் அக‌ழ்வினால் ஏற்ப‌டும் பிர‌ச்ச‌னைக‌ள் குறித்தும், பொருளாதார‌ அடிப்ப‌டையில் கூட‌ இது எவ்வ‌ள‌வு முட்டாள்த‌ன‌மான‌ திட்ட‌ம் என்ப‌தை விள‌க்கும் வ‌ந்த‌ க‌ட்டுரையையும் இங்கு ப‌திய‌ வேண்டுகோள் வைக்கின்றேன்.

    இக்க‌ட்டுரையை சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம் ஆங்கில‌த்தில் மொழியாக்க‌ம் செய்து வ‌ருகின்ற‌து. உங்க‌ள‌து மின்ன‌ஞ்ச‌ல் கொடுத்து உத‌வினால், மொழியாக்க‌ம் முடிந்த‌ உட‌ன் உங்க‌ளுக்கு அனுப்புகின்றேன்.

    ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌
    சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம்

    ReplyDelete